முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழத் தேவையில்லை - பிரதமர் link


முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய தேவையில்லை என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.அதேபோன்று நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.
கம்பளை ஸாஹிரா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
"அளுத்தமை சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு அச்சப்பட வேண்டாம். நாட்டில் சகல பிரஜைகளும் அச்சமின்றி பயமின்றி வாழ வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். 1,400 வருடங்கள் சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவு நீடித்து வருகின்றது. இதனை இல்லாமலாக்க முற்படும் சக்திகளுக்கு இடமளிக்க முடியாது.
மனித உரிமைகள் தொடர்பான விசாரனைகள் பற்றிய முன்னெடுப்புக்களுக்கு மத்தியில் சர்வதேச சக்திகள் நாட்டில் சதித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இன நல்லுறவை சீர்குலைக்கும் சக்திகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்வோம் நாட்டில் சிறுபான்மை இனம் என்பதற்காக ஒரு இனம் அச்சப்படுவது நியாயமானதல்ல.
இந்நாட்டில் நினைக்க முடியாத பல சம்பவங்க்ள நடைபெறுகின்றன. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் அரசாங்கம் நிலைநாட்டும்" என்றார்.

Comments

Popular Posts