பொதுபல சேனா கண்டியில் நாளை மனவுறுதி பூஜை: பொலிஸார் எதிர்ப்பு! கோத்தபாய ஆதரவு

பொதுபல சேனா அமைப்பு கண்டி நாத ஆலயத்தில் இனவாதம் மற்றும் மத வாதத்தை தூண்டும் கூட்டம் ஒன்றை மனவுறுதி பூஜை என்ற பெயரில் நடத்த தயாராகி வருதுடன் அதற்கு பொலிஸார் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டமானது அளுத்கம கூட்டத்தை போன்று கண்டி முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த மக்களை தூண்டி விடும் கூட்டம் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக கண்டியில் உள்ள முஸ்லிம்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கண்டி மீரா மக்கம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த போவதாக பொதுபல சேனா அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருந்தாக முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் நடைபெறும் மனவுறுதி பூஜைக்கு இலங்கை நான்கு திசைகளிலும் இருந்து வரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொதுபல சேனா பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
இனவாத தாக்குதலுக்கு நான்கு திசைகளில் இருந்து திட்டமிட்டு வன்முறையாளர்களை பயங்கரவாதிகளே அழைத்து வருபவர்கள்.
எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் கூட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவை பெற பொலிஸ் அதிகாரிகள் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க அவர்களை திருப்பி அழைத்துள்ளார்.
பொதுபல சேனாவின் பூஜைக்கு பின்னர், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மத ரீதியான பகையுணர்வை தூண்டும் சகல கூட்டங்களுக்கும் தடைவிதிப்பது என பொலிஸ் மா அதிபர் நேற்று தீர்மானித்துள்ளதால், தடையுத்தரவை பெற நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய அதிகாரிகளை பொலிஸ் மா அதிபர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
கண்டி நீதவானை அவரது உத்தியோகபூர்வ அறையில் சென்று சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments

Popular Posts